பாகிஸ்தான் விமானமான ஆண்டனோவ் ஏ.என்.-12. நேற்று இந்திய விமானப்படையால் இடைமறித்து தரையிறக்கப்பட்டது.
பாகிஸ்தான் சரக்கு விமானமான இந்த விமானத்திற்கு கராச்சியிலிருந்து டெல்லி செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த விமானம் அதன் பாதையிலிருந்து மாறி கட்ச் பாலைவன வான்வெளி பகுதிக்குள் நுழைந்தது. இதை ரேடார் மூலம் அறிந்த இந்திய விமானப்படை சமிஞ்சைகளை அனுப்பியது, ஆனால் அதற்கு பதில் சமிஞ்சைகளை அந்த விமானத்திலிருந்தவர்கள் அனுப்பவில்லை.
பின்னர் ஜெய்ப்பூருக்கு 60 கி.மீ. தொலைவில் கீழிறங்கத் தொடங்கியது. தற்போது இந்த விமானம் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் உள்ளது. நேற்று மாலையிலிருந்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த விமானத்திலிருந்த சரக்குகளை ஆய்வுசெய்ய ஒரு குழுவினரையும் அனுப்பவுள்ளனர்.
#WATCH: Indian Air Force fighter jets force an Antonov AN-12 heavy cargo plane coming from Pakistani Air space to land at Jaipur airport. Questioning of pilots on. pic.twitter.com/esuGbtu9Tl
— ANI (@ANI) May 10, 2019