Published on 31/07/2019 | Edited on 31/07/2019
அரியவகை தேயிலையாக கூறப்படும் மனோகரி கோல்ட் தேயிலை ஒரு கிலோ ரூ.50 ஆயிரத்துக்கு ஏலம் போயுள்ளது.

அசாம் தேயிலை தோட்டத்தில் வளரும் இந்த தேயிலை தங்க நிறத்தில் காட்சியளிப்பது இதன் தனி சிறப்பாகும். மனோகரி தேயிலை என்ற இந்த தங்க தேயிலை வளர சரியான தட்பவெப்ப நிலை வேண்டும். வெப்பநிலை சற்று மாறினாலும் இதன் வளர்ச்சி பாதிக்கும். எனவே இதற்கென எப்போதும் தனி மார்க்கெட் உள்ளது. இந்நிலையில் இந்த வருடத்துக்கான தேயிலை ஏலத்தில் மனோகரி கோல்ட் தேயிலை ஒரு கிலோ ரூ.50 ஆயிரத்துக்கு ஏலம் போயுள்ளது.