காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கடந்த 6-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அதைதொடர்ந்து காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் வெகு வேகமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த பணிகள் முடிந்த பிறகு காஷ்மீரில் உள்ள அனைவருக்கும் ஆதார் அட்டை காட்டாயமாக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீர் மக்களிடம் ஆதார் அட்டை கட்டாய திட்டம் கொண்டுவருவதன் மூலம் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த முடியும் எனவும் எதிர்ப்பார்க்கபடுகிறது.

fgd

Advertisment

காஷ்மீரில் தற்போது 60 சதவீதபேர் ஆதார் அட்டை பெற்றுள்ளதாகவும், அதை அக்டோபர் 31 ஆம் தேதிக்கு பிறகு 100 சதவீதம் முழுமையாக்க முடிவு செய்யப்பட உள்ளது எனவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆதார் கட்டாயமாக்கப்படுவதற்கு குறிப்பிட்ட கால அளவை மத்திய அரசு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.