![gfhgfhgf](http://image.nakkheeran.in/cdn/farfuture/GBwfhqK0Iyv4oPXPZU1IlpPHP0fF9UAyLjjfDcHH1xM/1549551802/sites/default/files/inline-images/noida-hospital-std.jpg)
நொய்டாவின் 12 ஆவது செக்டரில் உள்ள இதய சிகிச்சை மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அந்த பகுதியே புகை மண்டலமாகியுள்ளது. நொய்டாவில் இயங்கி வரும் இந்த மருத்துவமனையின் மூன்றாவது தலத்தில் ஏற்பட்ட தீயானது விறுவிறுவென அதற்கு மேல் உள்ள நான்காவது தளத்திற்கும் பரவியது. இதனையடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அங்குள்ள நோயாளிகளை பொதுமக்கள் வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன்பின் தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் வந்து மீட்பு பணியை துரிதப்படுத்தினர். அங்கிருந்த நோயாளிகள் மீட்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இன்னும் சில நோயாளிகள் உள்ளே மாட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உயிர் சேதங்கள் குறித்து இதுவரை எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை. இது தொடர்பாக அங்குள்ள காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.