Skip to main content

முதலமைச்சரை தள்ளிவிட்ட பாதுகாப்பு அதிகாரி! நடவடிக்கை எடுக்கக்கோரி முற்றுகை போராட்டம்! 

Published on 15/06/2022 | Edited on 15/06/2022

 

Security officer dismisses Chief Minister! Siege struggle to take action!

 

புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வில்லியனூர் பகுதியில் உள்ள திருக்காமேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது. இந்த தேர் திருவிழாவின்போது உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் பாதுகாப்பு அதிகாரியான ராஜசேகர் என்பவர் கூட்ட நெரிசலில் சிக்கி, நிலை தடுமாறி முதல்வர் ரங்கசாமியை தள்ளிவிட்டார். 


இந்நிலையில் முதல்வர் ரங்கசாமியை தள்ளிவிட்ட பாதுகாப்பு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுச்சேரி பொதுப்பணித் துறையில் பணிபுரியும் 20க்கும் மேற்பட்ட வவுச்சர் ஊழியர்கள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்ததால் இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஊழியர்கள் தடையை மீறி ஆளுநர் மாளிகை வாயில் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகையிட முயன்றதால் போலீசாருக்கும், வவுச்சர் ஊழியர்களுக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு காணப்பட்டது.

 

தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் சமாதானப்படுத்தி கலையச் செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்