Skip to main content

ஸ்வப்னா சுரேஷை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. மனுத்தாக்கல்!

Published on 13/07/2020 | Edited on 13/07/2020

 

rt


கேரளாவையே உலுக்கிய தங்கக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக தேடப்பட்டு வந்த ஸ்வப்னா சுரேஷ் தமிழகம் வந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், நேற்று முன்தினம் பெங்களூரில் கைது செய்யப்பட்டார். 

 

என்.ஐ.ஏ. போலீசார் அவரை கைது செய்த நிலையில் இன்று கொச்சியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா, சந்தீப் ஆகியோர் நீதிமன்றத்தில் தற்போது ஆஜர்படுத்தப்பட்டனர். பெங்களூரில் கைது செய்த இருவரையும் கொச்சி அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்னதாக இருவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆஜர் படுத்தப்பட்ட ஸ்வப்னா, சந்தீப் ஆகியோருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா பரிசோதனை முடிவுகள் அவர்களுக்கு பாதிப்பில்லை என்று முடிவுகள் வந்துள்ள நிலையில், அவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அம்மனுவில் என்.ஐ.ஏ. கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்