பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த 20 பேருக்கு உருமாறிய கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அதில், "சூழலைப் பொறுத்து இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முயலுங்கள். இன்று, நாளை, நாளை மறுநாள் ஆகிய நாட்களில் சூழலைப் பொறுத்து கட்டுப்பாடுகளை விதிக்கலாம். புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கூட்டம் சேர்வதை கட்டுப்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கலாம். உருமாறிய கரோனா பரவ அதிக வாய்ப்புள்ள அனைத்து நிகழ்வுகளையும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.