Skip to main content

ஃபானி புயலுக்காக தனது ஒருவருட சம்பளத்தை வழங்கிய முதல்வர்...

Published on 07/05/2019 | Edited on 07/05/2019

அதிதீவிர புயலான ஃபானி புயல் கடந்த வாரம் ஒடிசா மாநிலத்தில் கரையை கடந்தது. ஃபானி புயலால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஒடிசாவில் லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. மேலும் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனி தீவுகளாக மாறியுள்ளது.

 

naveen

 

 

குறிப்பாக பூரி, புவனேஸ்வர் ஆகிய பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒடிசா மாநிலத்திற்கான நிவாரண நிதியாக மத்திய அரசு 1381 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மேலும் பல மாநிலங்களுக்கு ஒடிசாவிற்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

இந்நிலையில் ஒடிசா மாநிலத்தின் முதல்வரான நவீன் பட்நாயக் தனது பங்காக அவருடைய ஒரு வருட சம்பளத்தை நிவாரண நிதிக்கு அளிப்பதாக அறிவித்துள்ளார். அவரின் இந்த செயல் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்நிலையில் மறுசீரமைப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ள ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், அம்மாநிலம் முழுவதும் சாலைகள், மின்கம்பங்கள் மற்றும் வங்கிகளை விரைந்து சீரமைக்க உத்தரவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்