மலேசிய பிரதமர் மகாதீர் முகமது பதவி விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் மகாதீர் முகமது தலைமையிலான ஆட்சி இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாக உள்ள நிலையில், பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கு மகாவீர் முடிவெடுத்துள்ளார். அவரது கட்சி கூட்டணிகளின் வலியுறுத்தலின் பேரில் மகாதீர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, ஆளும் கூட்டணியின் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று மகாதீர் தனது ராஜினாமா கடிதத்தை மலேசியா மன்னரிடம் கொடுத்ததாக மலேசியப் பிரதமரின் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
மகாதீர் முகமதுவின் ராஜினாமாவை தொடர்ந்து அவருடைய கட்சியை சேர்ந்த மற்றொரு முக்கிய தலைவரான அன்வர் இம்ராகிம் தலைமையிலான புதிய அரசை அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மகாதீருக்கும், அன்வர் இம்ராகிமுக்கும் நீண்ட நாட்களாக பனிப்போர் நிகழ்ந்து வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த நிகழ்வுகளின் மூலம் அது உறுதியாகியுள்ளதாக அரசியல் வட்டாரத்தினர் தெரிவித்து வருகின்றனர்.