Published on 25/02/2023 | Edited on 25/02/2023
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கும் லட்டு பிரசாதம் பிளாஸ்டிக், துணி பைகளில் வழங்கப்பட்ட நிலையில் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு இனி ஓலை பெட்டிகளில் மட்டுமே லட்டு விநியோகிக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
பனை மற்றும் தென்னை ஓலைகளை வைத்து பின்னப்பட்ட பெட்டிகளில் இனி லட்டு விற்கப்படும். இதற்காக ஓலை பெட்டிகளை 10 ரூபாய், 15 ரூபாய், 20 ரூபாய் என மூன்று அளவுகளில் விற்க கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.