Skip to main content

கேரள தொடர் கொலையில் புதிய திருப்பம்!

Published on 25/11/2019 | Edited on 26/11/2019

கேரளாவில் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜோலி தாமஸ். இவர் தனது குடும்பத்தை சேர்ந்தவர்களை உணவில் விஷம் கலந்து கொலை செய்த விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய அளவில் பரபரப்பை கிளப்பியது. கேரள போலீசால் கைது செய்யப்பட்ட ஜோலியிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் முதன்முதலில் ஜோலி சூப்பில் சயனைடு கலந்து தனது நாய்க்கு கொடுத்து சோதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாய்க்கு வெறிபிடித்ததால் கொல்வதற்காக அப்படி செய்ததாக ஜோலி கூறியிருந்தாலும் போலீஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்களாம்.
 

j



ஜோலியின் தொடர் கொலை சம்பவங்களுக்கு ஆரம்பமாக நாய்க்கு விஷம் வைத்த சம்பவம் இருக்கலாம் என போலீஸ் கருதுவதால் நாய் புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடித்து பிரேத பரிசோதனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்