Published on 08/09/2018 | Edited on 08/09/2018

கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபடும் இளைஞர்களை எளிதில் பிடிக்க புதிய தந்திரத்தை காஷ்மீர் போலீசார் கையாண்டு வருகின்றனர்.
காஷ்மீரில் கல்வீச்சு சம்பவம் தொடர்ந்து அடிக்கடி நடைபெற்று வரும் சூழலில் கல்வீச்சில் ஈடுபடும் இளைஞர்களை காஷ்மீர் போலீசார் எளிதில் பிடிக்கவும் தடுக்கவும் புதிய முறையை கையாண்டு வருகின்றனர். காஷ்மீர் போலீசாரே கல் வீசுபவர்கள் போல வேடமிட்டு தெருவில் இறங்கி கல்வீசும் இளைஞர்களை எளிதில் பிடித்து கைது செய்வதுதான் அந்த புதிய உத்தியாம்.