Skip to main content

கடந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலின் வருமானம் எவ்வளவு தெரியுமா..?

Published on 03/01/2020 | Edited on 04/01/2020

இந்தியாவில் பெரிய கோயில்களில் ஒன்றாக திகழ்வது திருப்பதி ஏழுமலையான் கோயில். இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்கதர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இங்கு மக்கள் கூட்டம் குறைவாக இருந்த நாட்கள் என்பது மிகக்குறைவு. எப்போது மக்கள் கூட்டம் உச்சத்திலேயே இருக்கும். இந்நிலையில் கடந்த ஆண்டு மட்டும் 2,78,90,179 பேர் ஏழுமலையான தரிசித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகிய உள்ளது.



மேலும் பக்தர்கள் காணிக்கையாக மட்டும் 1200 கோடி வரை வழங்கியுள்ளதாகவும் தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், 12,49,80,815 லட்சம் லட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

 

சார்ந்த செய்திகள்