பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. 2 தொகுதிகளுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் 222 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இன்று காலை, 7:00 மணி முதல், ஓட்டுப்பதிவு துவங்கி நடைபெற்றுவருகிறது. . மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மூலம் மாநிலம் முழுவதும், 56 ஆயிரத்து 995 சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில்,2.44 கோடிபெண்கள் உட்பட ஐந்து கோடி வாக்காளர்கள், ஓட்டளிக்க தகுதி பெற்று உள்ளனர்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் கட்சியான காங்கிரசும் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவும் தலா 222 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. ஐக்கிய ஜனதா தளம் 201 தொகுதிகளில் களம் இறங்க உள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ் பா.ஜ.க மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று கட்சிகள் தனித்தனியே போட்டியிடுவதால் மும்முனை போட்டி நிலவுகிறது.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்தத் தேர்தல் பார்க்கப்படுவதால் நாடே இந்த தேர்தலை உற்று நோக்குகிறது. தேர்தல் முடிவுகள் வரும் 15ம் தேதி மதியம் வெளியாகிறது.