
நெல்லையில் இளைஞர் ஒருவர் நள்ளிரவில் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நெல்லை மாவட்டம் நெல்லை டவுன் குருநாதன் கோவில் விளக்கு அருகே இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக நெல்லை டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. வெளியானதாக புகார் உண்மையா அல்லது வதந்தியா என போலீசார் அந்த பகுதியில் முகாமிட்டு இரவு வரை தேடுதலில் ஈடுபட்டனர்.
நள்ளிரவு 12 மணி வரை விசாரணை நடைபெற்றது. நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டது உறுதியானது. புதைக்கப்பட்ட இளைஞரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக நள்ளிரவே போலீசார் விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில் இறந்த இளைஞரின் பெயர் ஆறுமுகம் (20) என்பதும் காதல் விவகாரத்தில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதும் தெரிந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இருவரில் ஒருவர் 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்துள்ளது. நள்ளிரவில் இந்த கொலைச் சம்பவம் நெல்லை டவுன் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.