Skip to main content

“தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்படுவார்”- நவாப் மாலிக்

Published on 25/11/2019 | Edited on 25/11/2019

மஹாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், சிவசேனா தலைமையில் ஆட்சியமைக்க தீவிர முயற்சி மேற்கொண்ட நிலையில், 22ஆம் தேதி இரவோடு இரவாக பேச்சு முடிந்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது. இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்று அதிர்ச்சியூட்டினார். இதனால் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
 

nawab malik

 

 

வருகிற 30ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க கோரி பாஜகவுக்கு ஆளுநர் கெடு விதித்துள்ளார். 288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க பாரதீய ஜனதாவுக்கு குறைந்தபட்சம் 145 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. பாரதீய ஜனதாவிடம் 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். சிவசேனாவுக்கு 56 எம்.எல்.ஏ.க்களும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு 54 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசுக்கு 44 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். சிறிய கட்சிகளுக்கு 16 பேரும், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 13 பேரும் உள்ளனர். 

இந்நிலையில் மஹாராஷ்டிராவின் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித் பவார் பின் எத்தனை எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள் என்று வெளிப்படையாக தெரியவில்லை. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக், “தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 165 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. பெரும்பான்மை இல்லை என்பதை உணர்ந்து, தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்யவில்லை என்றால், நம்பிக்கை வாக்கெடுப்பில் அவரை தோற்கடிப்போம். தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஏமாற்றிய அஜித் பவார் துணை முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும்” என்று பேட்டியளித்துள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்