Skip to main content

' நீட் நுழைவுத் தேர்வு... இது என்ன கிறுக்குத்தனம்' - அமைச்சரின் பேச்சுக்கு ஜார்கண்ட் முதல்வர் கண்டனம்!

Published on 30/08/2021 | Edited on 30/08/2021

 

m

 

இந்தியாவில் கரோனா தொற்று குறைந்திருந்த நிலையில் தற்போது சிறிய அளவில் தொற்று உயர்ந்து வருகிறது. இருந்தும் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்கிடையே அடுத்த மாதத்தில் நீட், ஜே.இ.இ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்கான ஹால்டிக்கெட்டுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய கல்வி அமைச்சர் போக்ரியால், " மாணவர்கள் நுழைவுத் தேர்வை விரும்புவது இதன் மூலம் உறுதியாகியுள்ளது" என்று தெரிவித்திருந்தார்.

 

அமைச்சரின் இந்த கருத்துக்கு ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், " நீட் தேர்வுக்கு லட்சக்கணக்கான மாணவர்கள் ஹால்டிக்கெட்டுக்களை பதிவிறக்கம் செய்துள்ளனர் என்று மத்திய அரசு கூறுகிறது. இது என்ன ஒரு கிறுக்குத்தனம். அப்படியென்றால் ஆயுள் காப்பீட்டுத் தொகை செய்துள்ளவர்கள் அனைவரும் இறந்துவிடுவார்கள் என்று அர்த்தம் ஆகிவிடுமா?" என கேள்வி எழுப்பியுள்ளார். நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளை ஹேமந்த் சோரன் தொடர்ந்து எதிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

சார்ந்த செய்திகள்