புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் என்.ஆர் காங்கிரஸ் பிரமுகரான மோகன் கமல். இவருக்கு கடந்த சில நாட்களாகப் தொடர்பில் இல்லாத எண்களில் இருந்து போன் வந்திருக்கிறது. அதில் சில அடையாளம் தெரியாத பெண்கள், ‘ஸ்பா சென்டரில் இருந்து அழைப்பதாகக் கூறி, தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது’. அதன் பின்னர் மசாஜ் செய்ய வருமாறு ஸ்பா சென்டரில் இருந்து போன் செய்து பெண்கள் தொந்தரவு கொடுப்பதாக என்.ஆர் காங்கிராஸ் பிரமுகர் பெரியக்கடை போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் பேசிய பெண்கள், மசாஜ் செய்ய வருமாறு அழைப்பு விடுத்து தொடர்ந்து தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
மோகன் கமலை தொடர்பு கொண்ட அந்த பெண், ‘ஸ்பா சென்டரிலிருந்து அழைக்கிறோம் வர ஐடியா இருக்கிறதா’? எனக் கேட்டுள்ளார். அதற்கு அவர் ‘யாரும்மா நீங்க? சும்மா சும்மா போன் பண்ணிக்கிட்டே இருக்கிங்க, எங்கிருந்து கூப்டுறிங்க’ எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண்ணோ ‘உங்க நம்பர் எங்ககிட்ட இருக்கு, அதான் கால் பண்றோம்’ எனக் கூறி அவரைக் கேலி செய்தும் பேசியுள்ளார். அதன் பின்னர் அவர்கள் ‘வர முடியும்னா முடியும்னு சொல்லுங்க, இல்ல முடியாது சொல்லுங்க’ எனத் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தொந்தரவு செய்ததால் ‘கொஞ்ச நேரம் கழித்து ஸ்டேஷனில் இருந்து போன் அடிக்க சொல்றேன், அவங்க வருவாங்க போனை வையுங்க’ எனக் கூறித் தொடர்பை துண்டித்துள்ளார்.
ஸ்பா சென்டர் என்ற பெயரில் பல மோசடிகள் நடைபெற்று வரும் நிலையில் இது குறித்து பெரியக்கடை காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.