![bvnbvnbnv](http://image.nakkheeran.in/cdn/farfuture/suTTxtzIL98J3E2ddIexHImC1io1TNK9Qjxs5BDLcAQ/1549541732/sites/default/files/inline-images/indrani-karthik-std.jpg)
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் இன்று காலை 11 மணிக்கு கார்த்திக் சிதம்பரம் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் கார்த்திக் சிதம்பரம் அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய இந்திராணி முகர்ஜி தற்போது அப்ரூவராக மாற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்பருவராக மாறுவது தொடர்பாக அவர் பாட்டியாலா நீதிமன்றத்திற்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியாவின் முன்னாள் இயக்குனராக இருந்த இந்திராணி இந்த ஊழல் வழக்கிலும் அதற்காக தனது சொந்த மகளை கொலை செய்த வழக்கிலும் கொலை குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அப்ரூவராக விரும்புவதாக தற்போது இந்திராணி முகர்ஜி தெரிவித்துள்ளது இந்த வழக்கில் மிகப்பெரிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.