Skip to main content

நிர்பயா வழக்கின் தண்டனை மறுஆய்வு விசாரணை !! இன்று தீர்ப்பு!!

Published on 09/07/2018 | Edited on 09/07/2018

 

 

NIRPAYA

 

 

 

டெல்லி மருத்தவ மாணவி நிர்பயா வழக்கில் தண்டனை  பெற்ற 3 பேர் தொடுத்துள்ள மறுஆய்வு மனுவின் மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் இன்று பிற்பகல் தீர்ப்புவழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் 6 பேரால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

 

இந்த சம்பவம் பெண்களுக்கு எதிரான நடைபெரும் பாலியல் குற்றங்களுக்கு தண்டனை இன்னும் கடினமாக வேண்டும் என்ற முழக்கத்தோடு பெரும் எதிர்ப்பு அலையை நாடு முழுவதும் உருவாக்கியது.

 

 

 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரில் ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் சிறுவன் என கருத்தப்ட்ட ஒருவன் 3 ஆண்டு சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டான்.

 

அதில் குற்றம்சாட்டப்பட்ட ராம்சிங் திகார் சிறையில் தூக்குபோட்டு உயிரிழந்தான். அதனை தொடர்ந்து சாகித் விரைவு நீதிமன்றம் 2013-ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்தது. இதனை அடுத்து அக்சய் தாகூர், பவன் ,வினைஷர்மா,முகேஷ்  ஆகிய நான்கு பெருக்கும் தூக்குத்தண்டனை கைதிகளாக இருந்து வருகின்றனர்.

 

 

2017-ஆம் ஆண்டு ஜனவரியில் டெல்லி உச்சநீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட நால்வரில் 3 பேர் தொடுத்த தண்டனை குறித்த மறு ஆய்வு மனுவின் மீதான விசாரணையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. 

சார்ந்த செய்திகள்