Published on 20/03/2025 | Edited on 20/03/2025

அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மூன்று மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.