Published on 16/07/2022 | Edited on 16/07/2022
இலங்கையில் புதிய அதிபர் விரைவில் தேர்வு செய்யப்படவுள்ள நிலையில், அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பாவை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே இன்று (16/07/2022) காலை கொழும்புவில் நேரில் சந்தித்துப் பேசினார்.
இது குறித்து இந்திய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கௌரவ சபாநாயகர் அவர்களை உயர் ஸ்தானிகர் இன்று காலை சந்தித்தார். மிகவும் முக்கியமான இத்தருணத்தில் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பை நிலைநிறுத்துவதில் பாராளுமன்றத்தின் வகிபாகத்தை உயர் ஸ்தானிகர் பாராட்டினார்.
மேலும், இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா உறுதுணையாக இருக்குமெனவும் உயர் ஸ்தானிகர் இச்சந்திப்பின்போது தெரிவித்தார்." இவ்வாறு ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.