கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் கல்லூரி கட்டிடத்தின் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நாராயண கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவர் ஒருவர், கல்லூரி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த அதிர்ச்சி சம்பவம், அங்கு பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
அந்த வீடியோவில், காலை 10:15 மணியளவில் வகுப்பு நடந்து கொண்டிருந்த போது, அந்த மாணவர் அறையை விட்டு வெளியேறி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தால், கல்லூரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.