சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்த தஹில் ரமாணி மேகாலயா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து தற்போது சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக வினீத் கோத்தாரி உள்ள நிலையில் பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரை செய்து தற்போது அறிவித்துள்ளது.
சமீபத்தில், இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்படக் கலைஞர்கள் 49 பேர் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டது. வழக்கு பதியப்பட்டதுக்கான காரணமாக, நாட்டில் நடக்கும் மத ரீதியான தாக்குதல் குறித்து கடிதம் ஒன்றை பிரதமருக்கு அனுப்பியது முன்வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தை தேசத் துரோக வழக்காக பதிவு செய்ய அனுமதி அளித்து பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி என்பது குறிப்பிடத்தக்கது. இவர்தான் இப்போது நமது மாநிலத்தின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்க இருக்கிறார்.