Published on 12/09/2018 | Edited on 12/09/2018
![HDFC](http://image.nakkheeran.in/cdn/farfuture/W40r0qmC28nNWkH8esAPxQIRXLEkax7DKQp9M69n0AE/1536768560/sites/default/files/inline-images/hdfcc-inn.jpg)
எச்.டி.எஃப்.சி. லைஃப் எனும், எச்.டி.எஃப்.சி. இன்சூரன்ஸின் புதிய நிர்வாக இயக்குனராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் 'விபா படல்கர்' (Vibha padalkar) இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் என்று எச்.டி. எஃப்.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது. இவர் 2008-ஆம் ஆண்டு முதல் எச்.டி.எஃப்.சி நிர்வாகத்தில் பணியாற்றிவருகிறார். இவர் இதற்குமுன் சர்வதேச தணிக்கையிலும் இன்னும்பிற சர்வதேச நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.