காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறியதன் மூலம் குலாம் நபி ஆசாத் சுதந்திர பறவையாகி விட்டார் என மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் குலாம் நபி ஆசாத் விலகியுள்ளார். மேலும் தான் தனி கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். இந்நிலையில் காங்கிரசில் இருந்து விலகியதன் மூலம் குலாம் நபி ஆசாத் சுதந்திர பறவையாக ஆகிவிட்டார் என ஸ்மிரிதி ராணி கூறியுள்ளார்.
ஆசாத் என்றால் இந்தியில் சுதந்திரம் என்று பொருள். இதை குறிப்பிட்டு குலாம் நபி ஆசாத்திற்கு தற்போது சுதந்திரம் கிடைத்து விட்டது என கூறியுள்ளார். நேரு குடும்பத்தில் சஞ்சய் காந்தி, ராகுல் காந்தி, ராஜிவ் காந்தி, சோனியா காந்தி என நால்வர் எம்பியாக இருந்த அமேதி தொகுதியில் 2019 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜகவின் ஸ்மிரிதி ராணி வெற்றி பெற்றார். எனவே இதை கருத்தில் கொண்டு அமேதி தொகுதிக்கு ஏற்கனவே சுதந்திரம் கிடைத்து விட்டது என கூறியுள்ளார்.