ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வீட்டில் அடையாளம் தெரியாத நபர், பாதுகாப்பு ஊழியர்களை மீறி வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்து அடித்து உடைத்தால், அவரை பாதுகாப்பு ஊழியர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்முவில் இருக்கும் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா வீட்டில் அடையாளம் தெரியாத நபர் பாதுகாப்பு ஊழியர்களை மீறி, சந்தேகம்படும் வகையில் வலுக்கட்டாயமாக நுழைந்து, மேலும் அங்கிருக்கும் பொருட்களை அடித்து உடைத்துள்ளார். பின்னர், பாதுகாப்பின் பேரில் அடையாளம் தெரியாதவரை சுட்டுவீழ்த்தியுள்ளனர். இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளனர்.
பரூக் அப்துல்லாவின் மகனான ஒமர் அப்துல்லாவும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வராக இருந்துள்ளார். அவர் இதுகுறித்து தன்னுடைய ட்விட்டரில்," என்னுடைய அப்பா வீட்டில் நடந்த இந்த சம்பவம் குறித்து நான் மிகவும் அச்சப்படுகிறேன். நான் பதிந்தியிலும் எனது அப்பா ஜம்முவிலும் வசித்து வருகிறோம். இது முழுக்க திட்டமிடப்பட்டதாக சொல்லப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.