திருப்பது ஏழுமலையான் கோயிலில் சிறப்பு சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன.
உலக புகழ் பெற்ற ஏழுமலையான் கோயிலில் வழக்கமாக பக்தர்கள் வழிபட மட்டுமின்றி பல்வேறு சிறப்பு நிகழ்வுகளும், பூஜைகளும் நடைபெறுகின்றன. இவற்றுக்கென தனித்த சீட்டுகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 17- ஆம் தேதி அன்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளைக் கூட்டத்தில் சிறப்பு சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்துவதற்கான திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. அதன்படி, வஸ்த்ர அலங்கார சேவைக்கான கட்டணம் 50,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. கல்யாண உற்சவ சேவைக்கான கட்டணம் ரூபாய் 1,000- லிருந்து ரூபாய் 2,500 ஆக அதிகரிக்கிறது. அதேபோல் சுப்ரபாத தரிசன கட்டணம் ரூபாய் 240- லிருந்து ரூபாய் 2,000 ஆக உயருகிறது.
புதிய கட்டணங்கள் அனைத்தும் அடுத்த ஒரு சில நாட்களில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.