
தனது மறுமணத்திற்குச் சம்மதம் தெரிவிக்காததால், மகனை துப்பாக்கியால் சுட்டு தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்தவர் ரம்பாய் போரிச்சா (85). இவரது மனைவி 20 ஆண்டுகளுக்கு இறந்துவிட்டர். இவரது மகன் பிரபாத் போரிச்சாவுக்கு (52) திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார்.
இந்த நிலையில், ரம்பாய் போர்ச்சா மறுமணம் செய்ய விரும்பியுள்ளார். தந்தையின் விருப்பத்திற்கு மகன் பிரபாத் போரிச்சா மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால், குடும்பத்துக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில், மகனையும் குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாக தொடர்ந்து ரம்பாய் மிரட்டி வந்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று, பிரபாத்தின் மனைவி ஜெயபென், தனது மாமனாருக்கு தேநீர் கொடுக்கச் சென்றார். அப்போது, வீட்டில் இருந்து திடீரென்று துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெயபென் திரும்பி பார்க்கும்போது, அங்கு ரம்பாய் போரிச்சா துப்பாக்கியுடன் வெளியே வந்துள்ளார். அறைக்கு உள்ளே சென்று பார்த்த போது, அங்கு பிரபாத் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.
இதனையடுத்து, பிரபாத்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குk கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, ஜெயபென் இந்த சம்பவம் குறித்து போலீசிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், ரம்பாய் போரிச்சாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.