Skip to main content

விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி சட்டவிரோதம் - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பு வாதம்!

Published on 18/01/2021 | Edited on 18/01/2021

 

supreme court

 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் வேளாண் சட்டங்கள் தொடர்பாக ஒன்பது கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்தாலும், இதுவரை எந்த உடன்படும் ஏற்படவில்லை.

 

இந்தநிலையில், குடியரசுத்தினத்தன்று மாபெரும் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர். இந்தப் பேரணியை தடைசெய்யக் கோரி டெல்லி காவல்துறை, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று (18.01.2021) விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், டெல்லிக்குள் நுழைவது என்பது சட்ட ஒழுங்கு தொடர்பான விவகாரம் என்றும், அதுகுறித்து காவல்துறைதான் முடிவெடுக்க வேண்டும் எனக்கூறி இந்த மனு மீதான விசாரணையை நாளை மறுநாளுக்கு (20.01.21) ஒத்திவைத்தது.

 

டெல்லி காவல்துறையின் மனு மீதான விசாரணையின்போது ஆஜரான மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி சட்ட விரோதம். அப்பேரணியால் 5 ஆயிரம் பேர்வரை டெல்லிக்குள் நுழையலாம் என தெரிவித்ததது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்