Published on 07/12/2020 | Edited on 07/12/2020

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து, இந்தியா முழுவதும் பிரபலமானவர், நடிகை விஜயசாந்தி. தமிழில் ரஜினிகாந்தோடு, 'மன்னன்' படத்திலும் நடித்துள்ளார்.
நடிகை விஜயசாந்தி, பாஜகவில் இணைந்து தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினர். அதன் பிறகு தனிக்கட்சி ஆரம்பித்து நடத்தினார். பிறகு, தெலுங்கனா ராஷ்டிரிய சமிதியில் இணைந்தார்.
பிறகு, அதிலிருந்து வெளியேறி, காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர், சமீபத்தில் அந்தக் கட்சியிலிருந்து விலகினார். இந்நிலையில், நேற்று அமித் ஷாவைச் சந்தித்த இவர், இன்று (07.12.2020) பாஜகவில் இணைந்தார்.