Skip to main content

17-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகளை போல போலி பேஸ்புக் ஐடி!! -வாலிபர் கைது

Published on 22/07/2018 | Edited on 22/07/2018

கிட்டத்தட்ட17-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகளின் பெயர்களில் போலி பேஸ்புக் ஐடிகளை உருவாக்கி பயன்படுத்திவந்த நபரை போலீசார் அசாமில் கைது செய்துள்ளனர்.

 

அசாமில் போலீஸ் அதிகாரிகளின் பெயர்களில் கிட்டத்தட்ட 17 -க்கும் மேற்பட்ட போலி போலீஸ் அதிகாரிகளின் பெயர்களில் (டிஜிபி உட்பட ) பேஸ்புக் ஐடிகளை உருவாகியுள்ளான் கௌகாத்தியை சேர்ந்த சுலைமான் இப்றாஹிம் அலி என்ற ஒருவன். 37 வயதுடைய  இப்ராஹிம் அலியை கைது செய்த போலீசார் அவனிடம் விசாரணை நடத்தியதில் தான் விளையாட்டிற்கு அவ்வாறு செய்தேன் என கூறியுள்ளான். தெடர்ந்து அவனிடம் போலீசார் விசாரணை நடத்தி அவனிடம் இருந்து 47 மொபைல் போன்கள், 13 டேப்லெட்கள், 15 சிம்கார்டுகளை போலீசார் கைப்பற்றினர்.

 

FACEBOOK

 

 

 

இந்த ஆதரங்களை வைத்து சோதனை செய்ததில் அசாமில் ஓய்வுபெற்ற பொறியாளரின் மகனான  இப்றாஹிம் அலி வேலையில்லாமல் இருந்திருக்கிறார். எனவே இதுபோன்ற செயல்களில் இறங்கி பொழுதுபோக்காக போலீசார் போல போலி பேஸ்புக் ஐடிக்களை உருவாகியுள்ளான். 

அதுமட்டுமின்றி சலீம் தனது சொந்த பெயரிலேயே 15 பேஸ் புக் ஐடிக்கள் வைத்திருப்பதும் தெரியவந்தது. மேலும் அந்த ஐடிக்கள் கொஞ்சம் கூட போலி என எண்ணமுடியாத அளவுக்கு உண்மைபோல் உருவாக்கியுள்ளான். 

 

 

 

17-க்கும் மேற்பட்ட போலி போலீஸ் பேஸ்புக் ஐடிக்கள், தனது பெயரிலேயே 15 ஐடிக்கள் என குழம்பிய போலீசார் அவனை இந்த விவகாரம் தொடர்பாக தோண்டி துருவி விசாரித்துவருகின்றனர். மேலும் இதுபோன்ற போலி ஐடிக்களிடம் இருந்து பேஸ்புக் பயனர்கள் பாதுகாப்பாக இருந்துகொள்ளவேண்டும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்