Published on 04/05/2019 | Edited on 04/05/2019
மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் நான்கு கட்ட தேர்தல் முடிந்த நிலையில், அனைத்து கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது.
இந்நிலையில் இதுவரை நடந்த 4 கட்ட தேர்தல்களில் பதிவான வாக்குகளின் சதவீதம் குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, முதற்கட்ட தேர்தலில் 69.5%, 2வது கட்ட தேர்தலில் 69.44%, 3வது கட்ட தேர்தலில் 68.4% மற்றும் 4வது கட்ட தேர்தலில் 65.51% வாக்குகளும் பதிவாகி உள்ளன. குறிப்பாக தமிழகத்தில் 72.01% வாக்குகளும், புதுச்சேரியில் 81.19% வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.