முல்லை பெரியார் அணையின் நீர்மட்டம் 142அடியாக இருக்கிறது. இந்த 142அடியை 139அடியாக குறைத்துக்கொள்ள வேண்டி கேரளா முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையாக, முல்லை பெரியார் அணையின் நீர்மட்டம் சீராக இருப்பதாகவும், அதை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். எனவே அணையின் பாதுகாப்பிற்கு எந்த வித அச்சுறுத்தலும் வராது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ரசூல் ஜாய் என்பவர் முல்லை பெரியார் அணையின் நீர் மட்டத்தை குறைக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. இதில் முல்லை பெரியார் அணையை திறந்துவிடுவதில் தமிழக அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாகவும், இதனால் இடுக்கி மக்கள் பயத்துடன் வாழ்வதாகவும் வாதங்களில் சொல்லப்பட்டது.
இந்நிலையில், உச்சநீதி மன்றம் தமிழக அரசிடம் சில நாட்களுக்கு முல்லை பெரியார் அணையின் நீர் மட்டத்தை 138 அடியாக குறைக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், பெரியார் அணையின் கண்காணிப்பு குழுவிடம் அணையின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.