Skip to main content

கட்டுமாவடியில் கைகோர்த்த திமுகவினர்!

Published on 23/06/2019 | Edited on 23/06/2019

 

விளை நிலத்தை அழித்து மண்ணை மலடாக்கி விவசாயத்தை பொய்க்க வைத்து விவசாயிகளை அகதிகளாக விரட்டும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய மாநில அரசுகளே தடுத்து நிறுத்து.. அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் வாருங்கள் மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை 600 கி மீ வரை கரம் கோர்ப்போம் என்று பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் அழைப்புக் கொடுத்தது.

d


அந்த அழைப்பை ஏற்ற அரசியல் கட்சிகள், மாணவர்கள், மீனவர்கள், விவசாயிகள், போராளிகள் இன்று மாலை கழக்கு கடற்கரை சாலையில் திரண்டனர். 

d


 புதுக்கோட்டை மாவட்ட எல்லையான கட்டுமாவடியில் திமுக சொத்துப் பாதுகாப்புக் குழு அறந்தை ராஜன் தலைமையில் திமுக சமஉக்கள் திருமயம் ரகுபதி, புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு, மா. செ. பொறுப்பு செல்லப்பாண்டியன் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசி மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளும் கரம் கோர்த்தனர்.   இந்த அழிவு திட்டம் தடை செய்யும் வரை போராட்டங்கள் தொடரும் என்றனர்.
  

சார்ந்த செய்திகள்