![shivsena leader asking Karachi Sweets shop owner to change the name 'Karachi'](http://image.nakkheeran.in/cdn/farfuture/dALynEzub6te_Y2OMYKQEquHeiywmA7TETIe1p3L7vg/1605772266/sites/default/files/inline-images/fdfg_0.jpg)
சிவசேனா மூத்த தலைவர் நிதின் நந்த்கோக்கர் மும்பையில் உள்ள கடை ஒன்றின் பெயரை மாற்றக்கூறி உரிமையாளரை மிரட்டும் வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அக்கடையின் பெயர்ப் பலகை காகிதங்களைக் கொண்டு மறைக்கப்பட்டுள்ளது.
மும்பையின், மேற்கு பாந்த்ராவில் செயல்பட்டுவரும் 'கராச்சி ஸ்வீட்ஸ்' கடையில் நுழைந்த சிவசேனா மூத்த தலைவர் நிதின் நந்த்கோக்கரால், அந்த கடையின் உரிமையாளரிடம், கடையின் பெயரில் உள்ள 'கராச்சி' என்ற வார்த்தையை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக மராத்தி மொழியில் நல்ல பெயராக வைக்க வலியுறுத்தினார். மேலும், அந்த வீடியோவில், "நீங்கள் இதைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும், நாங்கள் உங்களுக்கு நேரம் தருகிறோம்" எனக் கடைக்காரரை மிரட்டும் வகையில் அவரது பேச்சு அமைந்திருந்தது. இந்த வீடியோ இணையத்தில் பரவி வைரலான நிலையில், அவரது செயலுக்கு ஆதரவாகவும், எதிர்க்கவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், அந்த கடையின் முன்பகுதியிலிருந்த பெயர்ப் பலகை தற்போது காகிதங்களைக் கொண்டு மறைக்கப்பட்டுள்ளது.