Skip to main content

நாடாளுமன்றத்தில் நிறைவேறியது 'அணை பாதுகாப்பு மசோதா'-தமிழக எம்.பிக்கள் எதிர்ப்பு

Published on 02/12/2021 | Edited on 02/12/2021

 

'Dam Protection Bill' passed in Parliament

 

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

கடந்த 29 ஆம் தேதியிலிருந்து தொடங்கி நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அணை பாதுகாப்பு மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதாவுக்கு மாநிலங்களவையில் ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா குறித்த பேச்சு வந்தபொழுதே இதை நிறைவேற்றக்கூடாது என்றும், நாடாளுமன்ற சிறப்புக்குழு ஒன்றை உருவாக்கி அணை பாதுகாப்பு மசோதாவைப் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கோரிக்கை வைத்திருந்தார்.

 

இந்நிலையில் நீண்ட விவாதத்திற்கு பின்னர் நாடாளுமன்ற சிறப்புக்குழு அமைத்து அணை பாதுகாப்பு சட்டத்தை பரிசீலனை செய்யவேண்டும் என்ற தீர்மானம் தொடர்பாக நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பில் அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 26 வாக்குகளும், எதிராக 80 வாக்குகளும் கிடைத்தது. அதன்பிறகு மசோதா மீதான குரல் வாக்கெடுப்பில் பெரும்பான்மை கிடைத்ததால் மசோதா இறுதியாக நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவை மற்றும் மக்களவையில் இந்த மசோதா ஒப்புதல் பெற்றுள்ளதால் விரைவில் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு சட்டமாக உருப்பெறும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாடாளுமன்றத்தில் ஹெலிகாப்டர் மூலம் இறங்கிய என்.எஸ்.ஜி வீரர்கள்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
NSG soldiers landed in parliament by helicopter

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் நாடாளுமன்ற வளாகத்துக்குள் இறங்கி ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்டனர்.

சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பார்வையாளர் மாடத்தில் இருந்து  அத்து மீறி சிலர் வண்ணத்தை உமிழும் பொருட்களை எடுத்துக்கொண்டு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்திற்குள் ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதனையடுத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து பல்வேறு விமர்சனங்களையும் கருத்துகளையும் வைத்திருந்தனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக என்.எஸ்.ஜி வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் டெல்லி நாடாளுமன்றத்தின் வளாகத்திற்குள் இறங்கி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.