Published on 19/01/2019 | Edited on 19/01/2019

ஹரியானா மாநிலத்திலுள்ள குருகிராமில் விடுதியில், பாஜக ‘எம்எல்ஏ’க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்று பெங்களூருவிலுள்ள சட்டமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதனை அடுத்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரிசார்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மஜத-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு கொடுத்த இரண்டு சுயேட்சைகள் தற்போது பின்வாங்கியிருப்பதால், மீண்டும் கர்நாடக அரசியலில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த பரபரப்பான நிலையில், குருகிராமுக்கு சென்ற பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார்.