இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து பிரம்மோஸ் ஏவுகணையை தயாரித்து வருகின்றன. உலகின் அதிவேக சூப்பர்சோனிக் ஏவுகணையான பிரம்மோஸை கப்பல், நீர் மூழ்கி கப்பல், விமானம், நிலம் ஆகியவற்றிலிருந்து ஏவ முடியும். இந்தநிலையில் இந்த ஏவுகணையை நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தயாராகி வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரம்மோஸ் ஏவுகணையை விற்பனை தொடர்பாக பிலிப்பைன்ஸும் இந்தியாவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும். விரைவில் பிலிப்பைன்ஸ் பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க இந்தியாவிற்கு ஆர்டர் அளிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இன்னும் சில நாடுகளுடனும் பிரம்மோஸ் ஏவுகணையை விற்பனை செய்வது தொடர்பாக இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அந்த அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரம்மோஸ் 2 என்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணையை தற்போது இந்தியாவும் ரஷ்யாவும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.