Published on 27/11/2019 | Edited on 27/11/2019
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் 14 செயற்கைகோளுடன் விண்ணில் பாய்ந்தது. இந்தியாவின் கார்டோசாட்-3 செயற்கைகோள் மற்றும் அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைகோள்களை சுமந்தபடி விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது பி.எஸ்.எல்.வி- சி47.
![The BSLV-C47, with 14 satellites launched](http://image.nakkheeran.in/cdn/farfuture/9h62pxru-4RaHxEUcVv4HMOYBaATz6hfEp5sXUHRT9Q/1574828456/sites/default/files/inline-images/ZXASASAA.jpg)
1,625 கிலோ எடைகொண்ட கார்டோசாட் செயற்கைகோள் புவி சுற்றுவட்ட பாதையில் 509 கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டது.
பூமியை கண்காணிப்பது மட்டுமல்லாதாது. உயர் தரத்திலான புகைப்படங்களை எடுத்து அனுப்பும் திறன் கொண்டது கார்டோசாட்-3 செயற்கைகோள். புவி வட்டப்பாதையில் 5 ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும் இந்த செயற்கைகோள் வானில் மேகக்கூட்டங்களை ஊடுருவி துல்லியமாக புகைப்படங்களை அனுப்பும் திறன் கொண்டது.