Skip to main content

இந்தியாவில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு! மாநிலங்களுக்கு மேலும் ரூ.3,000 கோடி நிதி என சுகாதாரத்துறை அறிவிப்பு!

Published on 06/04/2020 | Edited on 06/04/2020

சீனாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ், தற்போது 190 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் அச்சுறுத்தலையும், பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


  corona prevention issue- Central Government Announcement funds to State Government

 

இதற்கிடையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று பல்வேறு மாநில அரசுகள், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துவந்தன. இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையில் மாநிலங்களுக்கு மேலும் ரூ.3,000 கோடி நிதி வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை இணை செயலர் லால் அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும் தேசிய சுகாதார நடவடிக்கை நிதியிலிருந்து ஏற்கனவே ரூ.1,100 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்