
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவிக்கொண்டுள்ளது. இதனைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்தாலும், அறிகுறி இருந்தால், அனைவருக்கும் மறுபரிசோதனை கட்டாயம் செய்யவேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.