Skip to main content

"இந்தியாவில் கரோனா சமூகப் பரவல்" எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை...

Published on 07/04/2020 | Edited on 07/04/2020


இந்தியாவின் சில இடங்களில் கரோனா சமூகப் பரவல் தொடக்கியுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். 

 

corona community spread in india

 

 

உலகம் முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால், சுமார் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74,000-ஐ கடந்துள்ளது. மேலும், 2,86,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,281 லிருந்து 4,421 ஆக உயர்ந்துள்ளது. இதில் 114 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 326 பேர் வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டு குணமாகியுள்ளனர். இந்நிலையில் இந்தியா கரோனா பரவலில் இரண்டாம் நிலையில் தான் இன்னும் இருப்பதாகத் தெரிவித்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா, சில இடங்களில் சமூகப் பரவல் நிகழ்ந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியளர்களிடம் பேசிய அவர், "உலக நாடுகளை ஒப்பிடும்போது கரோனா வைரஸ் பரவலில் இந்தியாவின் சூழல் இன்னும் சிறப்பாகவே இருக்கிறது.ஆனால் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், நாட்டில் சில இடங்களில் சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளது.சமூகப் பரவலைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே நாம் கரோனா பரவலின் மூன்றாம் நிலையை எட்டாமல் இருக்க முடியும்.அதனால் சமூகப் பரவல் ஏற்பட்டுள்ள இடங்களை அடையாளம் கண்டு அங்கு அதிகமான சோதனைகள் நடத்தி பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். மூன்றாம் கட்டத்தில் வைரஸ் எங்கிருந்து பரவுகிறது, யார் மூலம் பரவுகிறது என்பதைக் கண்டறிவது கடினம். மிக வேகமாகப் பரவும்.அதி்கமான மக்கள் பாதிக்கப்படுவார்கள்.இந்த லாக்-டவுனை முறையாகப் பின்பற்றினால் நாம் மூன்றாம் நிலைக்குச் செல்வதைத் தவிர்க்கலாம்" எனத் தெரிவித்துள்ளார் 

 

 

சார்ந்த செய்திகள்