Skip to main content

23 ஆயிரம் ரூபாய் லேப்டாப்பிற்கு 45 ஆயிரம்  நஷ்டஈடு... அமேசானுக்கு செக் வைத்த நுகர்வோர் ஆணையம்! 

Published on 23/01/2021 | Edited on 23/01/2021

 

amazon

 

ஒடிசாவின் சட்ட கல்லூரி மாணவர் ஒருவர் கடந்த 2014ஆம் ஆண்டு பிரபல இணையதள விற்பனைத் தளமான அமேசானில் லேப்டாப் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். 23,499 ரூபாய் விலைகொண்ட அந்த லேப்டாப், சலுகையில் ரூ.190 ரூபாய் விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகையில் ஈர்க்கப்பட்ட அவர், அந்த லேப்டாப்பை ஆர்டர் செய்துள்ளார்.

 

சட்டக் கல்லூரி மாணவர் ஆர்டர் செய்த சிறிது நேரத்திலேயே, அவரை தொடர்புகொண்ட அமேசான் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம், விலை மந்தநிலை காரணமாக அவரது ஆர்டர் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே அவருக்கு லேப்டாப்பிற்கான உடனடி தேவை இருந்ததால், ஆர்டர் ரத்து செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் அமேசான் நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். இதற்கு அந்த நிறுவனம் பதிலளிக்கவில்லை.

 

இதனைத் தொடர்ந்து அந்த மாணவர் மாவட்ட நுகர்வோர் மன்றத்தை அணுகியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் மன்றம், மாணவருக்கு 12 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இந்த தீர்ப்பினால் ஏமாற்றமடைந்த சட்டக் கல்லூரி மாணவர், மாநில நுகர்வோர் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கினை விசாரித்த ஒடிசா மாநில நுகர்வோர் ஆணையம், நஷ்டஈடாக 40 ஆயிரமும், வழக்கு செலவிற்காக 5 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்