
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை தொகுதியின் உறுப்பினருமான ராகுல்காந்தி தலைமையில் எம்.பி.க்கள் அடங்கிய காங்கிரஸ் குழுவினர் உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ்க்கு புறப்பட்டனர்.
ஹத்ராஸில் கொல்லப்பட்ட இளம்பெண் குடும்பத்துக்கு ஆறுதல் கூற ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் குழு செல்கிறது. ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி காரிலும், ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் குழுவினர் பேருந்திலும் செல்கின்றனர்.
இதனிடையே, ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸாரை தடுத்து நிறுத்த நொய்டாவில் சாலை மூடப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
அக்டோபர் 1- ஆம் தேதி ஹத்ராஸ் செல்ல முயன்றபோது போலீசார் தடுத்ததில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு ராகுல்காந்தி கீழே விழுந்தார். மேலும் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை கைது செய்து சில மணிநேரத்திற்கு பிறகு விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.