இந்தியாவில் கரோனாவின் தாக்கம் உச்சத்திலிருந்து வரும் சூழலில், கடந்த சில நாட்களாகத் தினமும் 40 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்தவகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கரோனாவால் புதிதாகப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இந்நிலையில், பல மாநிலங்களில், அரசியல் தலைவர்களும் இந்தக் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். தமிழகம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் அமைச்சர்கள் கரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், அந்த வரிசையில் தற்போது, பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகானுக்கு கரோனா தொற்று சில தினங்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. 10 நாட்கள் கடந்த நிலையில் இன்று அவருக்கு மீண்டும் சோதனை செய்ததில் கரோனா தொற்று மீண்டும் உறுதியானது. எனவே அவர் தொடர்ந்து மருத்துவமனையில் இருப்பார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.