Published on 27/09/2019 | Edited on 27/09/2019
தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருந்த 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது கர்நாடகாவில்.

கர்நாடகாவில் 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கர்நாடக சபாநாயகர் 15 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ததால் கர்நாடகாவில் அந்த 15 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 21 ஆம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு 15 தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 5-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.