Skip to main content

சிறையில் இருந்து அர்னாப் கோஸ்வாமி விடுதலை!

Published on 11/11/2020 | Edited on 11/11/2020

 

hj

 

ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு, உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து, சிறைச்சாலையில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

பிரபல தொலைக்காட்சி நிறுவனமான, 'ரிபப்ளிக்' சேனலின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை, கட்டிட உள்ளரங்கு வடிவமைப்பாளரின் தற்கொலை வழக்கில், சமீபத்தில் கைது செய்தது, ராய்காட் மாவட்டத்தின் அலிபாக் காவல்துறை. இந்தக் கைது சம்பவம் தேசிய அளவில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட அர்னாப், தனக்கு ஜாமீன் வழங்கவேண்டி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அவருடன் கைது செய்யப்பட்ட நிதிஷ் ஷர்தா, பெரோஸ்சேக் ஆகியோரும் ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அவர்களது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய, உயர்நீதிமன்றம், கீழ் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அர்னாப் கோஸ்வாமிக்கு இன்று மாலை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில், தற்போது மும்பை சிறைச்சாலையில் இருந்து அர்னாப் கோஸ்வாமி விடுதலை செய்யப்பட்டுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்