Published on 19/11/2018 | Edited on 19/11/2018
![mamta](http://image.nakkheeran.in/cdn/farfuture/9-EPQ8pDhiMFRttftH49HNav-6XLOECicrCcKYQgIyw/1542645842/sites/default/files/inline-images/mamta%20chandra.jpg)
பாஜகவுக்கு எதிராக ஒரு மாபெரும் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து பேசிவருகிறார். சமீபத்தில் டில்லி சென்ற அவர் ராகுல், யெச்சூரி , முலாயம்சிங் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சு நடத்தினார். சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார்.
இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திப்பதற்காக இன்று கொல்கத்தா வந்தவர், கொல்கத்தாவின் தலைமைச் செயலகத்தில் மம்தா பானர்ஜியை சந்தித்தார். சந்திரபாபுவை வரவேற்பதற்காக தலைமைச் செயலகம் வாசலில் வந்து வரவேற்று உள்ளே அழைத்து சென்றார் மம்தா.