இன்று ஒடிஷா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் டிட்லி புயல் கடக்கின்றது என்று இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது. அறிவித்திருந்ததை போலவே, 140-150கிமீ வேகத்தில் புயல் கரையை கடக்கின்றது. ஒடிஷா மாநிலத்திலுள்ள கோபால்பூரில் ஒரு மணி நேரத்திற்கு 102 கிமீ வேகத்தில் புயல் காற்று வீசுவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக ஒடிசாவில் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 3 லட்சம் பேர் நேற்று இரவில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இந்த புயலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ 1000 தேசிய பேரிடர் மீட்புப் படையினரை மத்திய அரசு அனுப்பி இருக்கிறது. மொத்தம் 836 முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த டிட்லி புயலுக்கு 8 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகவேக காற்றினல், பல கட்டிடங்களின் கூறைகள், பல மரங்கள் கீழே விழுந்துள்ளன. இந்த புயலால ஒடிஷா மற்றும் தெலுங்கான மாநிலங்களில் உள்ள புயலால் பாதிக்கப்பட்ட பல மாவாட்டங்களில் மின்சாரம் மற்றும் தொலை தொடர்பு வசதி இன்று மக்கள் தவித்துவருகின்றனர். இந்த டிட்லி புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.